மானுடா நிறுத்து

மானுடா நிறுத்து 😎

தண்ணீர்க்கு கண்ணீர் விடும் நிலை
காரணம் தான் என்ன
இயற்கை தந்த கொடையை
தட்டி கழித்த மானுடம்
மழை கொட்டியது வெள்ளகாடானது
தன்னை காத்துக்கொண்டான்
தண்ணீரை சேமிக்க தவறவிட்டான்.
இவன் செய்து பல தவறுகளால் இயற்கையில் பல மாற்றம்
வல்லரசுகளின் அக்கிரமத்தால்
ஓசோன் படலத்தில் பல ஓட்டைகள்
பின் இயற்கை சீறாதா
சீறி பாயாதா
அளவுக்கு மீறிய விஞ்ஞான சட்டையை அனிந்து நடக்கும் மானுடமே
அந்த சட்டையை கழட்டி தூர எறி
போதும் உன் விஞ்ஞான விளையாட்டு
நில், திரும்பி பார்
இனியும் நீ இயற்கையுடன் கை கோர்கவில்லை என்றால் மானுடா
உன்னை காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது.
- பாலு.

எழுதியவர் : பாலு (5-Jun-19, 10:57 am)
சேர்த்தது : balu
பார்வை : 910

மேலே