சாரலையே

சாரலையே...
இலைகள் இறகுகள்
அனைத்துமே
உன்னை ரசிக்கிறதே!
பறவைகள் பறந்திடும்
காட்சிகள் கண்ணைப் பறிக்கிறதே!
நம் வாழ்வின் அதிசயம்
இயற்கை வளங்கள் தானே!
புவி சுற்றிடும் நேரத்தில்
சூரியன் சந்திரன்
ஓய்வின்றி பார்க்கிறதே!
பசுமையும் புதுமையும்
செழிமையும் வளமையும்
புவிமேலே படர்கிறதே...

நீர்நதியும் ஆழ்கடலும்
இவ்வுலகில் அலைவதெதற்காக?
இந்த பூமியே தினம் திண்டாடுதே
நீரின்றி உயிர்களும் ஒட்டாமலே
இந்த உடலைவிட்டு தூரம்
பறவைபோல் பறந்திடுதே!புவியில் பசுமை நிறைந்திடவே
வானம் கண்ணீர் தூவிடுதே!
பூக்கள் தினமும் மலர்ந்திடவே
திங்கள் தினமும் சாய்ந்திடுதே!
'வரி' கேட்காமல் நிற்கிறதே
நதியோரத்தில் மரங்களெல்லாம்!

எழுதியவர் : H.S.Hameed (5-Jun-19, 12:56 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 54

மேலே