பிறந்தநாள் நினைவுகள்

ஆவணி மாதத்து
பெருமழை நாளின்
நள்ளிரவில் பிறந்தவள்
பெரிய பேத்தி
பனிக்கடலை விதைத்த
மார்கழி பனியின்
அதிகாலை பிறந்தாள்
தீட்சண்யா
கொம்பாலே பயமுறுத்தும்
செவலை காளைக்கும்
தருணுக்கும் ஒரே வயது
குலதெய்வத்துக்கு
கொடை கொடுத்த
ஆடி வெள்ளியில்
பிறந்தாள் தேவி
மிகச்சரியாக ஞாயபகம்
வைத்து வாழ்த்துவாள்
தான் பிறந்ததினம்
அறியாத அம்மா...

எழுதியவர் : (11-May-19, 10:18 pm)
சேர்த்தது : கார்த்திகேயன் க
பார்வை : 63

மேலே