அந்நியமாகும் வெளி
நாய்க்குட்டி வாங்கும் ஆசை
வெறியாகிப் போனது
"காக்கா முட்டை" பார்த்தபிறகுதான்
மனிதர்களுக்கு மட்டுமே
அனுமதியிருக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பில்
சாத்தியமில்லையென்ற
அம்மாவின் அதட்டலில்
அக்கா நாய்க்குட்டியாகவும்
தீட்சண்யா எஜமானியாகவும்
பின்னே மாறியும்
விளையாட தொடங்கினார்கள்