sangeethasiyer - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : sangeethasiyer |
| இடம் | : pattukottai |
| பிறந்த தேதி | : 01-May-1976 |
| பாலினம் | : பெண் |
| சேர்ந்த நாள் | : 22-Oct-2012 |
| பார்த்தவர்கள் | : 121 |
| புள்ளி | : 42 |
இ அம வொர்கிங் எச எ டீச்சர்.
குழந்தையின்
கிறுக்கல்களை
ஓவியமாக்கி விடுகிறது
காகிதம்.
அழுகையைத் தான் விழுங்கி
புன்னகையைப் பரிசளிக்கிறது
பொம்மை.
மழலை மொழியை
தன் இரவு உணவாக்கிக் கொள்கிறது
நிலா.
கைகள் பட்டு
ஓடி உருண்டு விளையாடுகிறது
நடை வண்டி.
தூக்கத்திற்க்க்காகவே
பல தாலாட்டுப் பாடல்கள்
இமை திறக்கின்றன.
ஊதும் பொழுது
வெடிப்பதற்கு மனமின்றி
சுருங்கி விடுகின்றன
பலூன்கள்.
கால்கள் பட்டு அழிவதற்காகவே
காத்திருக்கின்றன
கோலங்கள்.
தம்மைக் கிள்ளிய
குழந்தையின் பாதங்களுக்கு
விரிப்பாகி மகிழ்கின்றன
மலர்கள்.
குழந்தை மகிழ
அதன் ஈரக்கால் பட்ட
தடத்தில் கடவுள்
பிரசன்னம்மாவதோ
கோகுலஷடமியன்று மட்ட
ஆறிலக்க சம்பளத்தில்
அதிர வைக்கும் அதிகாரி
அலுவல்களில் அசராமல்
ஆர்ப்பரிக்கும் அறிவாளி
எண்ணங்களை வண்ணங்களால்
மிளிர வைக்கும் மேதாவி
கைபட்டதைக் கலைப்பொருளாய்
உருமாற்றும் கலை ஞானி
முத்துக்களைக் காகிதத்தில்
கோர்த்திடுவாள் எழுத்தினிலே
சத்துக்களை ஒன்றிணைத்து
நிரப்பிடுவாள் வயிற்றினிலே
பிணக்குகளை இணக்கமாய்
சகித்திடுவாள் குணத்தினிலே
இழப்புகளை வாய்ப்புகளாய்
விதைத்திடுவாள் மனத்தினிலே
அனைத்திலும் ஊர்மெச்சி
அவள் நிமிர்ந்து விடாதபடி
அகம்பாவி எனத் தட்டிக்
குட்டிடாதே அவள் துணையே ......
உள்ளத்தைப்
பிரதிபலிக்கும் கண்ணாடி
காதல் நுழையும்
ரகசிய வழி
பார்வைப் பறவையின்
விரிந்த சிறகுகள்
இதயக் கோவிலின்
நுழைவு வாயில்.
குழந்தையின்
கிறுக்கல்களை
ஓவியமாக்கி விடுகிறது
காகிதம்.
அழுகையைத் தான் விழுங்கி
புன்னகையைப் பரிசளிக்கிறது
பொம்மை.
மழலை மொழியை
தன் இரவு உணவாக்கிக் கொள்கிறது
நிலா.
கைகள் பட்டு
ஓடி உருண்டு விளையாடுகிறது
நடை வண்டி.
தூக்கத்திற்க்க்காகவே
பல தாலாட்டுப் பாடல்கள்
இமை திறக்கின்றன.
ஊதும் பொழுது
வெடிப்பதற்கு மனமின்றி
சுருங்கி விடுகின்றன
பலூன்கள்.
கால்கள் பட்டு அழிவதற்காகவே
காத்திருக்கின்றன
கோலங்கள்.
தம்மைக் கிள்ளிய
குழந்தையின் பாதங்களுக்கு
விரிப்பாகி மகிழ்கின்றன
மலர்கள்.
குழந்தை மகிழ
அதன் ஈரக்கால் பட்ட
தடத்தில் கடவுள்
பிரசன்னம்மாவதோ
கோகுலஷடமியன்று மட்ட