குட்டு

ஆறிலக்க சம்பளத்தில்
அதிர வைக்கும் அதிகாரி
அலுவல்களில் அசராமல்
ஆர்ப்பரிக்கும் அறிவாளி
எண்ணங்களை வண்ணங்களால்
மிளிர வைக்கும் மேதாவி
கைபட்டதைக் கலைப்பொருளாய்
உருமாற்றும் கலை ஞானி
முத்துக்களைக் காகிதத்தில்
கோர்த்திடுவாள் எழுத்தினிலே
சத்துக்களை ஒன்றிணைத்து
நிரப்பிடுவாள் வயிற்றினிலே
பிணக்குகளை இணக்கமாய்
சகித்திடுவாள் குணத்தினிலே
இழப்புகளை வாய்ப்புகளாய்
விதைத்திடுவாள் மனத்தினிலே
அனைத்திலும் ஊர்மெச்சி
அவள் நிமிர்ந்து விடாதபடி
அகம்பாவி எனத் தட்டிக்
குட்டிடாதே அவள் துணையே ......

எழுதியவர் : எம் . சங்கீதா (16-May-15, 11:23 am)
பார்வை : 145

மேலே