காட்சிப் பிழை – கே-எஸ்-கலை
பசித்த குஞ்சுகளுக்கு
புறா குஞ்சுகளைக் கொடுத்தது
தாய் கழுகு !
================================ அரசியல் !
இரையின்றி திரும்பும்
தாய் காகத்தின் நினைவில்
குஞ்சுகளின் நினைவு !
================================ சீரழிவு!
கண்ணாடி பார்த்து
கர்வம் கொண்டதில்லை
பட்டாம் பூச்சிகள் !
================================ இயற்கை!
உலகம் உருண்டை
ஏற்றுக் கொள்ளாது
தொட்டி மீன்கள் !
================================ ஆயுள்கைதி !
உணவு கிடைத்ததும்
காகங்கள் கரையாது
ஆறாம் அறிவிருந்தால் !
================================ மனிதம் (?)
-----
(மேலதிக வார்த்தைகள் வாசகர் சிந்தனைக்காக)