சிவா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சிவா |
இடம் | : நாகபட்டினம் |
பிறந்த தேதி | : 07-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 1 |
தமிழை என்றும் கற்றுகொள்ளும் மாணவன்.
என்னை பெற்றவளை விட
எனக்கு அதிகம்
பாலூட்டியவள் !
அவளோடு
பேசவேதான் ஆசை !
என்னோடு பேச
ஏனோ தயக்கம் !
மோசம் செய்தவனிடம்
என்ன நேசம்
என்ற கோபமா?
எத்தனை குழந்தைக்கு
தாயானாய்
புட்டி பாலூட்டி !
உன் பிள்ளைக்கு
பாலூட்ட தடுத்தோமே
அதுதான் சோகமா?
மூக்கணாங்கயிறு பூட்டி
உனக்கு ஆயுள் விலங்காய்
போட்டதால்
உன் நெஞ்சு வலித்து
பேசவில்லையா?
என் பேச்சும்
என் செயலும்
புரிந்து நடந்தாயே
அது எப்படி?
ஒருநாள்
"அம்மா" வென்று
என்னைவிட
தெளிவாய் அழைத்த போது
திரும்பியது
உன் தாயல்ல
என் தாய்!
பேசும் திறமை
உனக்குள்
உறைந்து கிடக்கிறது!
வீட்டில் பிரச்சனை
என்ற
காத்திருந்து காத்திருந்து
காதலியை காணாதவனாய்
கைப்பிடி தேய்ந்த
நாற்காலியின் மேல்
முள்கம்பிகளாய் உணர
மென்மேலும் வெறுப்பேற்றியது
எனக்கு அந்த கடிகாரம்
யாருமே இல்லாத இடத்தில காற்றாடி
என்னிடம் ஆடி வருவதோ ஈக்கள்
அந்தி தேய்வதற்குள்
திரும்பி விட வேண்டும்
ஆனால்
இவள் அனைத்தையும் விட
இரண்டு நாட்களாய் உன்னை
காணாத வருத்தமே
மேலோங்கியது.
அந்த
நேர்முக தேர்வில்!!!