sivamaindan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sivamaindan
இடம்:  chennai
பிறந்த தேதி :  11-Dec-1949
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Sep-2012
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  3

என்னைப் பற்றி...

யதார்த்த கவிதை எழுதுவதில் ஆர்வம். இளையராஜாவால் ஒருமுறை பாராட்டப்பட்டவன்

என் படைப்புகள்
sivamaindan செய்திகள்
sivamaindan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 2:14 pm

முதுமை

இளமைச் சுவரில்
காலம் வரைந்த கோடுகள் !

வாழ்க்கை நாவலின்
கடைசி அத்தியாயம் !

அனுபவங்களை அசைபோட வைத்து
ஆனந்தம் காணும்!

பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக்கி
முதியோர் இல்லத்தில் குடியமர்த்தும் !

இரண்டு காலில் நடந்தவரை
மூன்று காலில் நடக்கவிட்டு
முடிவில்
நாலு கால் கட்டிலிலே படுக்க வைக்கும் !

இளமையின் வலிமைக்கு
எட்ட நின்ற நோய்களை
கிட்ட வந்து ஒட்ட வைக்கும் !

முதுமையின் இயலாமைகளை
நினைத்து வருந்தாதீர் !
முதுமையிலும் சாதிக்கலாம்
உள்ளம் இளமையாயிருக்கும் வரை !

மேலும்

sivamaindan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 2:10 pm

சாதனை நாயகன் சச்சின்


மட்டையைப் பிடிக்கும் போது
பதினாறு வயது பாலகன்!
ரிட்டையர் ஆகும் போது
பல சாதனைகளின் நாயகன்!

சோதனைக் காலங்களிலும்
சோர்ந்து விடாமல்
சாதனைச் சிகரத்தை எட்டிச்
சரித்திரம் படைத்தவன் !

இன்றைய தலைமுறையின்
இணையில்லா வீரனாகி
நாளைய தலைமுறைக்கு
நல்லதொரு ஊக்கம் அளித்தவன்!

சர்வ தேசக் கிரிக்கெட்டில்
சதங்கள் சதம் அடித்தும்
சளைக்காமல் சாதனைகள் புரிந்து
சரித்திரத்தில் இடம் பிடித்த சாமானியன்!

படைத்த பல அரிய சாதனைகளால்
பாரதத்தின் உயரிய விருதாம்
"பாரத ரத்னா " விருதுக்கே
பெருமை சேர்த்த வீரனவன் !

கோ,சிவகுமார்,சென்னை,

மேலும்

கருத்துகள்

மேலே