சாதனை நாயகன் சச்சின்
சாதனை நாயகன் சச்சின்
மட்டையைப் பிடிக்கும் போது
பதினாறு வயது பாலகன்!
ரிட்டையர் ஆகும் போது
பல சாதனைகளின் நாயகன்!
சோதனைக் காலங்களிலும்
சோர்ந்து விடாமல்
சாதனைச் சிகரத்தை எட்டிச்
சரித்திரம் படைத்தவன் !
இன்றைய தலைமுறையின்
இணையில்லா வீரனாகி
நாளைய தலைமுறைக்கு
நல்லதொரு ஊக்கம் அளித்தவன்!
சர்வ தேசக் கிரிக்கெட்டில்
சதங்கள் சதம் அடித்தும்
சளைக்காமல் சாதனைகள் புரிந்து
சரித்திரத்தில் இடம் பிடித்த சாமானியன்!
படைத்த பல அரிய சாதனைகளால்
பாரதத்தின் உயரிய விருதாம்
"பாரத ரத்னா " விருதுக்கே
பெருமை சேர்த்த வீரனவன் !
கோ,சிவகுமார்,சென்னை,