தமிழைக் குத்தும் நெருஞ்சி முட்கள்

கல்லுக்குக் கம்மல் போட்டது
காலை நேரக் கதிரவன் - என்
கவிதைக்குத் தீனி போட்டது
கன்னித் தமிழ் செம்மொழி...!
பறவைகள் சத்தம் போட்டது அது
பைந்தமிழில் கீர்த்தனை
பாசத் தமிழனை கட்டிப் போட்டது
பறங்கியர் பேசிய ஆங்கிலம்...!
தேனினும் இனிதேன்றே
தெள்ளு தமிழ் அறிவீர் நீர்..
தெரிந்தும் இதழ் வைத்தே
தீயினை சுவைத்திட்டீர்...
வேகுதே என் இதயம்
விடியலே நீயே சொல்....!
பழைய பேப்பர் கடையினிலே
பாரதியின் பாடல்களே.....
பாப் இசையே வீட்டிற்குள்ளே
பரட்டை தலையுடன் ஆடுவதேன்...?!
நெஞ்சு கனப்பதனால்
நிறுத்துகிறேன் கவி வரியை...
நெருஞ்சி முள்ளே நீ வலியில்லை - காரணம்
இன்னும்
நேராக வில்லை என் தமிழ் நாகரீகம்.....!