கண்களும் வயிறும் தெறிக்க

பார்வை பல விதம்
எண்ணமும் பல விதம்
நல்லதும் உண்டு
கெட்டதும் உண்டு

கண்ணால் அடிபடுவது
திருட்டி என்று வழங்கப்படும்
காலை வாங்கி கையை முடக்கி
உடம்பை படுத்தி சீரழிக்கும்.

கவலையைக் கொடுத்து
செல்வத்தை பறித்து
வறுமையில் வாடி சொல்லொண்ணாத்
துயரத்தை உண்டாக்கும்.


வயிறும் அவ்வாறே
வயிற்ரெ ரிச்சல் காவு வாங்கும்
சாபமும் சாட்டையும் ஒன்றே
இரண்டும் வகையான் கொடுமை


கதை என்று நினைக்க வேண்டாம்
உண்மை நிகழ்ச்சி ஒன்று
ஒருவன் பார்வை பட்டு
அழகான கட்டிடடம் பிளந்த்தது..


துவண்ட பெண்மணியின்
ஆத்திரமும் ஆவேசமும்
அவளை நிலை குலைய வைத்த
கயவர்களை சாம்பலாக்கியது


நம்பவும் முடியவில்லை
நம்பாமல் இருக்கவும் இயலவில்லை
கண்டதை எழுதுகிறேன்
கேட்டதை கவியாக்குகிறேன்..

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (19-Nov-13, 9:56 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 972

மேலே