வாங்கண்ணா வணக்கமுண்ணா

பறக்க விட்டேன் கவிதைகளை
பட்டாம் பூச்சி அதன் உருவம்....

மலர்கள் தேடி அதன் எண்ணம்
மயங்க வைத்ததே உம் இதயம்...

அமர்ந்து பருகிய அரும் தேனும்
அன்பாய் உமது ரசனை என்பேன்...

அழகிய இரு இமை திறந்து வைத்தே
அடைக்கலம் தந்தீர் மனசினுள்ளே...

சிந்தையில் தென்றல் வீச வைத்தே எனை
சிறு தொண்டு தமிழுக்கு புரிய வைத்தீர்....

சிரித்தே பறந்திடுவேன் நாளும் நானே
சிறந்தே உம் இதயம் சுற்றி சுற்றி

அழகிய பூஞ்சோலை எது என்றால்
அது தமிழால் நிறைந்த உம் இதயம்.....

ரத்த நாளம் பன்னீர் ஓடை
சித்த நினைவு தென்றல் சாடை

இந்த நொடி மகிழும் வேளை
இதயம் திறந்தேன் இனிய காலை -

வணக்கம்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Nov-13, 8:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 87

மேலே