பலே ராமன்
வாழ்வது கொஞ்ச நாட்கள்
அதில்அக்கப்போர் மிகுதி
வம்பு வழக்கும் அதி கம்
திமிரும் அடா வடியும் நிறைய
இப்படி வாழ்கிறான்
எனக்கு தெரிந்த ராமன்
தெரிந்தது அவனுக்கு எள்ளளவு
தலைக்கன்மோ உலகளவு
போக்கே தனி கட்டுப்பாடதது
கை நீட்டி சம்பளம் வாங்கிக் கொண்டு
கொடுப்பவரிடமே தன திமிரைக் காட்டுவான்
ராமன் பலே கையாள் .
ராமன் தன நிலை அறியாமல் வாழ்கிறான்
அவனுக்கோ வயது எழுபத்திஐந்து
பல அடிகள் பட்டும் திரு ந்தவில்லை
அடிகள் சாதராணம் அல்ல மரண அடிகள்
இருப்பினும் அவன் தன நோக்கத்திற்கு வாழ்கிறான்
இது ஓர் அறியாமை ஓர் இயலாமை .
நாளை நாம் இருப்பது உறுதி அல்ல
ராமனோ தான் சாசுவதம் என்றி நினைக்கிறான்.
மகனின் வாழ்வில் அமைதியை பங்கப்படுத்தி
மகளின் வாழ்வில் சூறாவளி யை உண்டாக்கி
போகும் இடமெல்லாம் கெடுதல் செய்து
வாழ்ந்து கொடிருக்கிறான் ராமன்.