கலை படைப்பு

கோடுகளின் உருவம் l ஓவியம்.
கற்களின் உருவம் சிற்பம்.
கனிமங்களின் உருவம் சிலை.
சுற்றி வரும் ஊரெல்லாம்
கண் கவர் கலை படைப்புக்கள்

கண் கண்டதை மனம் ஏற்க வேண்டும்.
மனம் ஏற்றதை கை செய்யவேண்டும்.
கையின் லாவகம் கலைப் பொருளாகவேண்டும்.
கண்டவர் வியத்திடல் வேண்டும்.
காலம் கடந்தும் கதை சொல்லவேண்டும்.

எடுத்து செய்திடும் போது,
எண்ணம் நேர் பெறவேண்டும்.
உண்மையும் உயர்வும் பெற்றிடல் வேண்டும்.
திறன் கூடுதல் தன்னிலை மறத்தல்,
கலை படைப்பின் தனிச்சிறப்பாகும்.

கோவில்கள் அனைத்தும் கலைக் கூடங்கள்.
ஓராயிரம் கதை சொல்லும் கலை படைப்புக்கள்.
படைத்தவன் பெயர் அறியாச் சிறப்பு,
படைப்பின் சிறப்பே அவன் நினைப்பு.

முன்னோரின் கலைச் சிறப்பை,
முழுதாய் விட்டு வைப்போம் ,காப்போம்.
வரும் கால சந்ததி,
அறியட்டும், வாழ்த்தட்டும்.

எழுதியவர் : arsm1952 (17-Nov-13, 3:56 pm)
Tanglish : kalai PATAIPU
பார்வை : 247

மேலே