கெட்டதை மறவாது

நல்லதை நினைவு கொள்
கெட்டதை மற .
என்று சொல்வது எளிது
செய்வது கடினம் .
இருந்தும் எல்லோரும்
சொல்வது இதுவே
நானும் சொல்வேன்
அதை வேகமாக .

சொல்லும் வார்த்தை சுடும்
செய்யும் செயல் கொதிக்கும்
சுடு வதையும் கொதிப் பதையும்
எப்படி மறப்பது
இதத்தையும் இனிமையும்
மறந்து விடலாம்
தகிப்பதை தா ங்கிக் கொள்ளலாம்
மற என்பது முடியாது.



நான் பேசுவது பிடிக்காது
என் பேச்சு ஒரு மாறுபாடு
மாற்றம் ஏற்கப்படுவதில்லை
மாறாக எதிர்க்கப்படும்
இருந்தும் என் நிலை பெயராமல்
சொல்லுகிறேன் வினயமாக
வாளாவிருப்பது பொறுமை அல்ல
அது மிகுந்த கோழைத்தனம்.


கவனம் கொள்ளுங்கள்
தீமையைக் கண்டு விலகாதிர்கள்
வேரோடு பறியுங்கள்
கூண்டோடு பிடுங்குங்கள்
மீண்டும் தலை தூக்க விடாமல்
சாகடியுங்கள் தீயவர்களை.
ஆற்றுங்கள் இப்பணியை
இப்போதே இந்த வினாடியே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (17-Nov-13, 3:54 pm)
பார்வை : 195

மேலே