முதுமை
முதுமை
இளமைச் சுவரில்
காலம் வரைந்த கோடுகள் !
வாழ்க்கை நாவலின்
கடைசி அத்தியாயம் !
அனுபவங்களை அசைபோட வைத்து
ஆனந்தம் காணும்!
பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக்கி
முதியோர் இல்லத்தில் குடியமர்த்தும் !
இரண்டு காலில் நடந்தவரை
மூன்று காலில் நடக்கவிட்டு
முடிவில்
நாலு கால் கட்டிலிலே படுக்க வைக்கும் !
இளமையின் வலிமைக்கு
எட்ட நின்ற நோய்களை
கிட்ட வந்து ஒட்ட வைக்கும் !
முதுமையின் இயலாமைகளை
நினைத்து வருந்தாதீர் !
முதுமையிலும் சாதிக்கலாம்
உள்ளம் இளமையாயிருக்கும் வரை !