thangamariappan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thangamariappan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 114 |
புள்ளி | : 2 |
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
நீ எனக்கு
மழை நேரத்து
சூடான தேநீர்
வெயில் காலத்து
மின்விசிறி காற்று
மயக்கும் மாலையின்
இளங் காற்று
நீளும் இரவுகளின்
நிசப்த நிம்மதி
மொட்டை மாடி
ஒற்றை நிலா
கோவில் மணியின்
இசை ஓசை
தீப ஆராதனையின்
சுடர் ஒளி
உயிர் கொண்ட
சாமி சிலை
உயிர் கொன்ற
முதல் நெருப்பு
என் மீசையை
தூண்டிலாகிய மீன்
என் ஆசையை
பேராசையாக்கிய உத்தி
என் தோசையை
உன்முகமாக்கிய மாயக்காரி
என் மேசையை
உன்பிம்பமாக்கிய தந்திரக்காரி
என் வேஷங்கள்
தீட்டும் ஒப்பனைக்காரி
என் தோஷங்கள்
போக்கும் ஜாதகக்காரி
என் தேசங்கள்
முழுவதின் வரைபடம்
என் குளத்தினைக்
எங்கள் பஞ்சம் தீர்க்க வந்த
சாமிக்கும் பஞ்சமில்லை
கோவிலுக்கும் பஞ்சமில்லை
கட்சிக்கும் பஞ்சமில்லை
தலைவர்களுக்கும் பஞ்சமில்லை
சாதிக்கும் பஞ்சமில்லை
சண்டைக்கும் பஞ்சமில்லை
ஆனால்
பஞ்சம் மட்டும் பஞ்சமில்லாமல்
எங்களிடம் அப்படியே இருக்கிறது.