பஞ்சம்
எங்கள் பஞ்சம் தீர்க்க வந்த
சாமிக்கும் பஞ்சமில்லை
கோவிலுக்கும் பஞ்சமில்லை
கட்சிக்கும் பஞ்சமில்லை
தலைவர்களுக்கும் பஞ்சமில்லை
சாதிக்கும் பஞ்சமில்லை
சண்டைக்கும் பஞ்சமில்லை
ஆனால்
பஞ்சம் மட்டும் பஞ்சமில்லாமல்
எங்களிடம் அப்படியே இருக்கிறது.