அடைவது என்றோ
அடைவது என்றோ...!?
===================
கண்ணில் வன்முறை
கையில் அகிம்சை
நடைகட்டும் யாத்திரை
துருவங்கள் பருவங்கள்
நீண்டு சுருங்கும்
பகல் இரவாய்
பரவும் இருள்
மேடு பள்ளம்
விளிம்பின் வெளிச்சம்
தேடி திரியும்
புத்தி மனம்
ஆர்ப்பரிக்கும் இதயம்
கடக்கும் உணர்வு
முற்றிலும் துறந்து
இறுதியின் ஞானம்
அடைவது என்றோ...!?
-J.K.பாலாஜி-