சாமானியன் வாழ்க்கை
சக்கரம் போலச் சுழன்றேன்
சாதிக்க வேண்டு மென்று
சாதனைகள் ஏது மில்லை
சங்கடங்களே சிகர மேறின
சாப்பிட நிதம்சோ றுமில்லை
சத்துக்களோ சக்கரயாய் கரைந்தன
சிரிப்பிற்கு பஞ்ச மில்லை
சிந்தையில் சிகரம் வைத்தேன்
சிலரின் சலிப்பானப் பேச்சில்
சரிந்தது என்மன சாட்சி
சிற்றம்பலம் சுற்றி வந்தேன்
சிவனருள் வேண்டு மென்று
சாவிற்கு அஞ்சவில்லை சாதித்தப்பின்
சாவே என்னை நெருங்கு