விக்னேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2015
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  7

என்னைப் பற்றி...

புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம் -மாக்ஸிம் கார்க்கி.

என் படைப்புகள்
விக்னேஷ் செய்திகள்
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2016 9:37 am

“பொங்கல் கவிதை போட்டி 2015”

நாளை புத்தகம் இருக்காது,
நம் மொழி இருக்கும்.
எழுது கோல் இருக்காது,
நம் எழுத்து இருக்கும்,
வேட்டி இருக்காது,
அரைக்கால்சட்டை அணிந்த
நம் தமிழர் உலகேங்கும் இருப்பார்கள்.

மேலும்

அன்புள்ள படைப்பளாருக்கு, போட்டியின் விதிமுறையின் படி தங்கள் படைப்புக்களை அனுப்பினால் தான் போட்டிக்கு எடுத்துகொள்ளப்படும் எழுத்து தளத்தில் போட்டியின் விதிமுறையை படித்துவிடுங்களேன்! நன்றி! 15-Jan-2016 2:40 pm
இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Jan-2016 11:48 am
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2015 6:05 pm

இருக்க இடம் இல்லை;
படுக்கப் பாய் இல்லை.
இருப்பதை உலர்த்த வெயில்லை.
ஒரு குடம் நிரப்பவே பாதி நாள் எடுக்கும் பகுதியில்,
ஒரு மணி நேரத்தில் கழுத்துவரை நிரம்பிவிட்டது.
சென்னைக்கு மிக அருகாமையில் என்று சொன்னவர்கள்,
இன்னும் யாரும் கண்ணில் படவில்லை.
உலகத்தின் மூத்த குடியான நீர்.
சில ஆண்டுகள் உதிர்ந்து மறைந்த பின் மிண்டும்,
அதன் குடில் திரும்பியது,
வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Dec-2015 1:10 am
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2015 2:26 pm

அதிகாரி : வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும் அனைவரும் வரிசையில் வரவும்.
"முருகன் தன் பழைய ஒட்டு வீட்டை இடித்துவிட்டு வரிசையில் வந்து நின்றான்"
அதிகாரி : மன்னிக்கவும் சிறிய தவறு, குடிசை வீட்டைஇழந்தவா்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும்.

மேலும்

பருவத்திற்கு ஏற்ற நகைச்சுவை 17-Dec-2015 11:37 am
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2015 12:03 pm

பிரியமுடன் மனைவி கேட்டால் செய் மகனே,
என்னால் முடியாது அம்மா!.
அப்படி என்ன கேட்டாள்?
என்னளவு உதவ பாா்க்கிறேன் சொல் என்னிடம்.
ஆம் முடியும், உன்னால் மட்டும் தான் உதவ முடியும்.
சாி செய்கிறேன் சொல் ?
சத்தியமாக?
நிச்சையமாக செய்கிறேன் சொல்?
உன்னை காப்பகத்தில் வைத்து காக்க சொல்கிறாள் !!
மௌனம்கலைத்த தாய் சொன்னாள்,
உன்னை காத்த எனக்கு,
என்னை காத்துக்கொள்ள தொியும்
போகிறேன் வாழ்க வளமுடன்.

மேலும்

காலத்துக்கு ஏற்ற வரிகள் 28-Nov-2015 1:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே