அன்னை உள்ளம்
பிரியமுடன் மனைவி கேட்டால் செய் மகனே,
என்னால் முடியாது அம்மா!.
அப்படி என்ன கேட்டாள்?
என்னளவு உதவ பாா்க்கிறேன் சொல் என்னிடம்.
ஆம் முடியும், உன்னால் மட்டும் தான் உதவ முடியும்.
சாி செய்கிறேன் சொல் ?
சத்தியமாக?
நிச்சையமாக செய்கிறேன் சொல்?
உன்னை காப்பகத்தில் வைத்து காக்க சொல்கிறாள் !!
மௌனம்கலைத்த தாய் சொன்னாள்,
உன்னை காத்த எனக்கு,
என்னை காத்துக்கொள்ள தொியும்
போகிறேன் வாழ்க வளமுடன்.