குண்டுக் கருப்பழகி

நாடார் இனி உன்னை யாரும் நாடார் இனி
நானிருக்க என் அத்தை மகளே குண்டுக் கருப்பழகி !
உன் கண்ணிரண்டும் மின்னல் வெட்டு
உன் பாதிச் சிரிப்பில் பளிச்சிடும் வெள்ளை நிலா !
முறை மாமன் நான் என்றல் முறைச்சுப் பார்க்கிறான் உங்கப்பன்
மூலதனம் இருக்கா மூளை இருக்கா பரிசில் போட
பணம் இருக்கா என்று கேட்கிறான்
கைநாட்டுத் திலகம் உங்கப்பன் அவன்
கைவச்ச இடமெல்லாம் ஐசுவரியம்
விளக்கு மாத்திலிருந்து விளக்கெண்ணை வரை விக்கிறான் !
உன்னை ஜிம்ல போட்டு இளைக்க வச்சு சீமை மாப்பிள்ளைக்கு குடுக்க
திட்டம் வச்சிருக்கன் ; விட்டிடுவேனா ?
ஜிம்ல போட்டா நீ இளைக்க மாட்ட உம் பணத்துல ஜிம்காரன் குண்டடிப்பான் !
கை அளக்காததையா கயித்து டேப்பு அளக்கும் ?
மஞ்சக் கயித்துல தாலி கட்டி தை மாத்தையில
எத்தனை குண்டயிருந்தால் என்ன உன்னைக் கட்டி அணைப்பேனடி
இது சத்தியமடி என் அத்தை மகளே !

குண்டுக் கருப்பழகி செண்டுச் சிரிப்பழகி
மறக்க முடிய வில்லையே யே யே யே ...............................யே
பாழாப் போன மனசுல பாட்டா வருது

அவ நெனப்ப மறக்க லேகியம் தாரேன்னு சொல்லுதா பாட்டி !

போய்ச் சேர்ந்த புருசன் கூட குத்தாலம் போன கதையை இன்னும்
ரா வெல்லாம் புலம்புதுயே ..
நெனைப்பெல்லாம் லேகியத்துல போகுமா பாட்டின்னேன் ..

அது கிடக்கட்டும் யேன் அத்தை பெத்த ரத்தினமே !
அன்னமென நடக்க வேண்டாம் கனவில் வரும்போது அதிராமல் நடக்கலாமே
அதிர்வில் தூக்கம் கலைஞ்சுடுத்து கனவு போயிடுது
மீண்டும் கனவு வந்தால் ....
பக்கத்து வீட்டு பரதேசி கைமாத்து கேக்கான்

கனவிலாவது சித்த மெல்ல நடக்கலாமே ...?

குண்டுக் கருப்பழகி செண்டுச் சிரிப்பழகி
மறக்க முடிய வில்லையே யே யே யே ...............................யே

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (28-Nov-15, 9:49 am)
பார்வை : 288

மேலே