விசாகன் ச - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விசாகன் ச |
இடம் | : THENI |
பிறந்த தேதி | : 29-Aug-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 4 |
தமிழ் மற்றும் தமிழர் மீது ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவன் .
திட்டம் தீட்டி சட்டம் போட்டு கொட்டம் போடும் மானிட,
வட்டம் போட்டு கொட்டம் அடக்க நாட்கள் இல்லை ஓடடா...
பசுமை கண்டு பாய்ந்து வந்து வியந்து நின்ற மானிட,
புதுமை கொண்டு பாய்ந்து வந்து விரட்டி விடுவோம் ஓடடா...
ஒன்றுகூட நாட்கள் உண்டு என்று என்னும் மானிட,
ஒற்றை நொடியில் ஒன்றுகூடும் உறவுகள் நாங்கடா...
ஒன்றுமறிய பிள்ளையென எண்ணி வந்த மானிட,
உன் அப்பனுக்கே படம் சொல்லும் அப்பன்மார்கள் நாங்கடா...
மாட்டை தொட மன்றாடி மாண்டு போன மானிட,
மண் எங்கள் பெண் போல கனவை மறந்து ஓடடா...
எச்சரிக்கை கண்டு நீயும் எட்டி ஓடு மானிட,
நன்மை சொல்லும் நால்வர் பேச்சை நாலும் கேளு மானிட ....
தமிழகத்தின் தண்ணீர் குவளை எங்கள் பரணி ,
அதன் சலசலப்பு ஓசையே எங்கள் கானம்,
அள்ள குறையாத அமிர்த பானம்...
விலைமதிப்பில்லா அமிர்தமதனை விஷமாக்க
வந்த வர்த்தக வாசுகியே...
உரக்க சொல்கிறேன் கேள் ...
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு ...
நீரின்றி அமையாது உழவு என்பது உழவன் வாக்கு ...
உயிர்ப்பிச்சை இடும் போதே உறைவிடம் தேடி ஓடிவிடு...
நதி அதன் அழகு கரை புரண்டு ஓடும் வரைதான்...
உன் வர்த்தக முடிவே உன் வாழ்வாதாரம்...
உன் வர்த்தக தொடர்ச்சி எம்மக்களுக்கான கிளர்ச்சி...
-ஜெய்ஹிந்த்-
ஆண் அல்லது பெண் உடல் என்னும்
பிணத்திற்கு மதிப்பு இல்லை
ஆண் அல்லது பெண் உயிர்
என்னும் பேய்க்கும் மதிப்பு இல்லை
பிணமும் பேயும் இணைந்த
மனிதனுக்கும் மதிப்பு இல்லை
அதற்குள் இருக்கும்
ஆண்மைகும் மற்றும் பெண்மைக்கும் தான் மதிப்பு
தமிழகத்தின் தண்ணீர் குவளை எங்கள் பரணி ,
அதன் சலசலப்பு ஓசையே எங்கள் கானம்,
அள்ள குறையாத அமிர்த பானம்...
விலைமதிப்பில்லா அமிர்தமதனை விஷமாக்க
வந்த வர்த்தக வாசுகியே...
உரக்க சொல்கிறேன் கேள் ...
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு ...
நீரின்றி அமையாது உழவு என்பது உழவன் வாக்கு ...
உயிர்ப்பிச்சை இடும் போதே உறைவிடம் தேடி ஓடிவிடு...
நதி அதன் அழகு கரை புரண்டு ஓடும் வரைதான்...
உன் வர்த்தக முடிவே உன் வாழ்வாதாரம்...
உன் வர்த்தக தொடர்ச்சி எம்மக்களுக்கான கிளர்ச்சி...
-ஜெய்ஹிந்த்-
தை திருநாளாம் ! தமிழர் திருநாளாம் !
உண்ண உணவின்றி உயிர் போகும் நிலை,
செத்து மடிகிறது பல எண்ணிக்கையில் தலை,
வஞ்சம் செய்கிறது வானில் மழை,
பஞ்சம் செய்ததோ மக்களின் பிழை ,
தீர்வது காண எடுக்கவேண்டும் களை ,
வானில் மழை இல்லை! நிலத்தில் நீர் இல்லை!
பின்பு ஏது களை-மூடனே
கலியுகம் களை தனை நீக்கி விட்டால் காலம் பொன்போன்றது !
கலியுகம் தலை தனை தூக்கி விட்டால் காலம் என்னாவது!
இதை உணர்ந்தது ஜல்லிக்கட்டு! அது உழுதது துள்ளிக்கிட்டு !
நீ சேர்ந்து மெட்டுக்கட்டு ! இல்லை ஒதுங்கி நில் வழியை விட்டு !
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு முடிஞ்சா என்னோடு மல்லுக்கட்டு !
துள்ளிக்கிட்டு துள்ளிக்கிட்டு உழுவோம்