ஜல்லிக்கட்டு

தை திருநாளாம் ! தமிழர் திருநாளாம் !
உண்ண உணவின்றி உயிர் போகும் நிலை,
செத்து மடிகிறது பல எண்ணிக்கையில் தலை,
வஞ்சம் செய்கிறது வானில் மழை,
பஞ்சம் செய்ததோ மக்களின் பிழை ,
தீர்வது காண எடுக்கவேண்டும் களை ,

வானில் மழை இல்லை! நிலத்தில் நீர் இல்லை!
பின்பு ஏது களை-மூடனே

கலியுகம் களை தனை நீக்கி விட்டால் காலம் பொன்போன்றது !
கலியுகம் தலை தனை தூக்கி விட்டால் காலம் என்னாவது!

இதை உணர்ந்தது ஜல்லிக்கட்டு! அது உழுதது துள்ளிக்கிட்டு !
நீ சேர்ந்து மெட்டுக்கட்டு ! இல்லை ஒதுங்கி நில் வழியை விட்டு !

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு முடிஞ்சா என்னோடு மல்லுக்கட்டு !
துள்ளிக்கிட்டு துள்ளிக்கிட்டு உழுவோம் வெட்கம்விட்டு வெட்கம்விட்டு !


- வின்

எழுதியவர் : விசாகன் ச (2-Mar-17, 12:11 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 85

மேலே