பரணி போற்றும் தாமிரபரணி
தமிழகத்தின் தண்ணீர் குவளை எங்கள் பரணி ,
அதன் சலசலப்பு ஓசையே எங்கள் கானம்,
அள்ள குறையாத அமிர்த பானம்...
விலைமதிப்பில்லா அமிர்தமதனை விஷமாக்க
வந்த வர்த்தக வாசுகியே...
உரக்க சொல்கிறேன் கேள் ...
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு ...
நீரின்றி அமையாது உழவு என்பது உழவன் வாக்கு ...
உயிர்ப்பிச்சை இடும் போதே உறைவிடம் தேடி ஓடிவிடு...
நதி அதன் அழகு கரை புரண்டு ஓடும் வரைதான்...
உன் வர்த்தக முடிவே உன் வாழ்வாதாரம்...
உன் வர்த்தக தொடர்ச்சி எம்மக்களுக்கான கிளர்ச்சி...
-ஜெய்ஹிந்த்-
-வின்