திட்டம்

திட்டம் தீட்டி சட்டம் போட்டு கொட்டம் போடும் மானிட,
வட்டம் போட்டு கொட்டம் அடக்க நாட்கள் இல்லை ஓடடா...

பசுமை கண்டு பாய்ந்து வந்து வியந்து நின்ற மானிட,
புதுமை கொண்டு பாய்ந்து வந்து விரட்டி விடுவோம் ஓடடா...

ஒன்றுகூட நாட்கள் உண்டு என்று என்னும் மானிட,
ஒற்றை நொடியில் ஒன்றுகூடும் உறவுகள் நாங்கடா...

ஒன்றுமறிய பிள்ளையென எண்ணி வந்த மானிட,
உன் அப்பனுக்கே படம் சொல்லும் அப்பன்மார்கள் நாங்கடா...

மாட்டை தொட மன்றாடி மாண்டு போன மானிட,
மண் எங்கள் பெண் போல கனவை மறந்து ஓடடா...

எச்சரிக்கை கண்டு நீயும் எட்டி ஓடு மானிட,
நன்மை சொல்லும் நால்வர் பேச்சை நாலும் கேளு மானிட ....

-வின்-

எழுதியவர் : விசாகன் ச (8-Mar-17, 12:00 pm)
சேர்த்தது : விசாகன் ச
Tanglish : THITTAM
பார்வை : 272

மேலே