மழை
மழையே வந்திடுவாய்
மாமழையாய்ப் பெய்திடுவாய்
காய்ந்துருகும் மண்ணை
உண்ணீரால் நனைத்திடுவாய்
உழவர் கண்ணீரைத் துடைத்திடுவாய்
குடிநீருக்காய் அலையும்
ஏழை மக்களின்
கண்ணீரைப் போக்கிடுவாய்
ஓடும் நீரற்றுவெறும்
மணலோடும் நதிகளில்
நீரோட்டம் தந்திடுவாய்
முன்போல் எழிலாய்
ஆடிவரும் நதிகளாய்
ஓடவிடுவாய்
ஆவினங்கள் மேய்ந்து
வயிறார உணவருந்த
பச்சைப் புல்லும் தாவரமும் தேவை
பாலைப்போல் வாடிநிற்கும்
இந்த பூமிக்கு நீர் தருவாய்
செடிகொடிகள் வளர்ந்து செழித்திட
நீர்த்தருவாய் மாமழையே
சற்றே காலம் தவறினாலும்
கார்கால பருவ மழையே
வருகைத தந்திடுவாய்
நல்ல மழைத் தந்திடுவாய்
நலம்பெற்று மக்கள் இன்புற
இன்னும் காலம் தாழ்த்தாது
வந்து பெய்திடுவாய்
வாராமல் மட்டும் போகாதே
மக்கள் வெய்தலை
வீணா சுமக்காதே
மழையே வந்திடுவாய்
மா மழையைத் தந்திடுவாய் .