யாதுபகன் றான்கா தலன்தூய வெண்ணிலவன்
தூதுசென்ற தென்றல் தமிழ்மன்றத் தோழனே
யாதுபகன் றான்கா தலன்தூய வெண்ணிலவன்
போதுபோகட் டும்நல்லி ராவரக் காத்திரு
தீதிலாநி லாவரு வான் !
-----கவின் சாரலன்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா.
வாய்விட்டுப் படித்துப் பாருங்கள்
கவிதையில் சொல்லோசை தரும் இன்பம் புரியும்