எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் கனவு காணாத
வாழ்க்கையை "நீ" கொடுத்தாய்
என் சொந்தங்கள்
உன் சொந்தங்கள்
அனைத்தும் ஆசைப்படும்படியான
"வெளிநாட்டு வாழ்க்கை"...
வாரம் ஒரு முறை என் அடுப்படிக்கு விடுமுறை கொடுத்தாய்...
நினைத்த நேரத்தில் புது துணிகளை வாங்கி
தந்தாய்...
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு என
இந்த அழகிய உலகத்தை நான் பார்க்க
காரணமானாய்...
இப்படி
நான் கேட்காத அனைத்தையும் கொடுக்க தயங்காத "நீ"
ஏன் சில சமயங்களில் நான் சொல்ல வருவதை கேட்க கூட தயாராக இல்லை?
நான் வாய் திறந்தாலே நீ கை நீட்டுவது ஏன்?
நான் தங்க கூண்டிற்குள் இருக்கும் "கிளி"
என் வாழ்க்கை என் எதிரிக்கும் வேண்டாம் என என்னை நினைக்க வைக்கிறாய்...மேலும்


மேலே