ஒரு கன்னியும் மூணு களவானிகளும் Oru Kanniyum Moonu Kalavaanikalum

Tamil Cinema Vimarsanam


ஒரு கன்னியும் மூணு களவானிகளும் oru kanniyum moonu kalavaanikalum விமர்சனம்
( Vimarsanam)

எல்லா படங்களிலும் உள்ள கதை போலத்தான் படத்தின் முதல் பகுதியில் கதை நகர்ந்தாலும்,இரண்டாம் பாகம் ஒரு அறிவுரையுடன் கூடிய சிறப்பான முடிவு.

ஆமாம்., தத்ரூபமான விதியின் விளையாட்டை, அழகாக படம் பிடித்து காட்டியுள்ளனர்,பட குழுவினர்.

ஏழையாக அழகான நாயகன் அருள்நிதி, உதயம் அஸ்ரிதா ஷெட்டி பெரிய வீட்டு நாயகியாக, இவர்கள் இருவருக்கும் காதல்.நாயகனின் நண்பர்களாக பிந்து மாதவியும்,பகவதி பெருமாளும்.

நாயகிக்கு வேறு ஒருவருடன் திருமண நாள் குறிக்கப்படுகிறது. இதனால் நாயகன் என்ன ஆனான்? தன்
நண்பர்களுடன் சேர்ந்து என்ன செய்கிறான்?வில்லனாக நாசர் ஏன் வருகிறார்?விதியின் விளையாட்டுதான் என்ன?என்பதை மிக அருமையாக படத்தில் காட்டியுள்ளார்கள்.

ஹிப்பி ஹிலரி வில்லனாக நாசரின் நடிப்பு சிறப்பு.

மாறுபட்ட நடிப்புடன் பிந்து மாதவி ஹிப்பி ஹேர்கட்டில் கலக்கியுள்ளார். பகவதி பெருமாளின் நகைச்சுவை மேலும் படத்தை பார்க்க வைக்கிறது.

நகைச்சுவை நாயகர்கள் பலரின் கூட்டமைப்பில் நல்ல பொழுதுபோக்கான படத்தை தந்திருக்கிறார் சிம்பு தேவன்.

ஒரு கன்னியும் மூணு களவானிகளும் -- துன்பத்தை களவாடிவிட்டு, இன்பமான சிரிப்புக்கன்னியைத்தரும்.

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்து பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-05 14:41:12
4.7 (14/3)
Close (X)

ஒரு கன்னியும் மூணு களவானிகளும் oru kanniyum moonu kalavaanikalum தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே