ஆசிரியர் தினம் ....!!!! ஆசிரியர்களே எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்...
ஆசிரியர் தினம் ....!!!!
ஆசிரியர்களே எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் விருட்சங்கள் இவர்களது நிழலில் இருந்து தான் ஒவ்வொருவரினதும் பயணமும் தொடங்குகின்றன ஒருவன் சமூகத்தில் நல்லவனாக வாழ்கின்றான் என்றால் அவனுக்குப் பின் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான் ஏனெனில் அவர்களிடம் இருந்து தான் அவன் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஊக்கம், ஒழுக்கம், அன்பு, பண்பு, அறிவு, வாழ்க்கை என்பவற்றையெல்லாம் கற்கின்றான் மேலும் ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதை நோக்குவோம்.
பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளில் தான் கொண்டாடப்படுகின்றது. 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதி திருத்தணிக்கு அருகே உள்ள சர்வபள்ளி எனும் ஊரில் ஓர் ஏழை பிராமணக் குடும்பத்ததில் பிறந்தார் தத்துவத்தை முதன்மைப்பாடமாகக் கொண்டு இளங்கலை துறையில் B A பட்டமும் முதுகலை துறையில் M A பட்டமும் பெற்ற இவர் தனது ஆசிரியர் பணியை சென்னையில் அமைந்துள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளர்களாகப் பணியாற்றினார்.
ராமானுஜர், மாதவர், சங்கரா போன்றவர்களின் வர்ணனைகளையும் மற்றும் இந்து மத இலக்கியத் தத்துவங்களான பகவற்கீதை பிரம்மசூத்திரா, உபனிடதங்களையும் கற்றுத் தேறினார். அது மட்டும் இல்லாமல் மேற்கத்தைய சிந்தனையாளர்களான ப்லோடினஸ்காந்த், பிராட்லி, பிளாட்டோமற்றும் பெர்சன் போன்றோரின் தத்துவங்களையும் ஜெயின் மற்றும் புத்தமத தத்துவங்களையும் கற்று அவைகளி உன்னதமான சிறப்பை பற்றி இந்திய நாட்டில் எடுத்துரைத்தார் மேற்கத்தைய நாடுகளுக்குச் செல்லாமல் இந்திய நாட்டிலேயே எல்லா சித்தாத்தங்களையும் படித்து ஓர் தத்துவ மேதையாக தன்னை இவ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
பின்னர் இவர் தத்துவ பேராசிரியாராகத் தேர்வு செய்யப்பட்டார்.அதன் பின்1923 ஆண்டு இவரின் அற்புதப் படைப்பான இந்தியத் தத்துவம் வெளியிடப்பட்டது. இது இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது. இவரது கல்விக்கான சேவை அளப்பெரியது மேலும் ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1931 ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். கல்வி முறையில் பல சீர் திருத்தங்களுக்கு இவரது பரிந்துரைகள் பெரிதும் உதவியது. இவர் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் சேவையாற்றியவர். இவரது பிறந்த நாளைக் கொண்டாட எத்தனித்த பொழுது இவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
எனவே ஒருவனை இச் சமூகம் ஒரு பெருமைக்குரியவனாகப் பார்க்கின்றது என்றால் அதற்கு காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான் என்பதில் எந்த வித ஜயமும் இல்லை தொடரட்டும் இவர்கள் பணி சிறக்கட்டும் இந்த கள்ளம் கபடம் இல்லா உள்ளங்களின் வாழ்க்கை அனைத்து ஆசிரியர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.