தியாகத்தின் மறு உருவம் .................................................. ஒரு முறை அன்னைத்...
தியாகத்தின் மறு உருவம்
..................................................
ஒரு முறை அன்னைத் தெரேசா பசியோடு வந்த ஒரு ஏழைத் தாய்க்கு சாப்பிட மூன்று
ரொட்டித் துண்டுகளை வழங்கினார் . நன்கு பசித்தவர்களுக்கு உணவு வழங்கினால்
உடனே சாப்பிடவே ஆசைப்படுவார்கள் . ஆனால் அந்தத் தாயோ மிக வேகமாக
அந்த இடத்தை விட்டு ஓட எத்தனித்தார்.
அவரை ஓட விடாமல் தடுத்த அன்னைத் தெரேசா , "சாப்பிடாமல் எங்க போறீங்க ...."
என் வினவினார் . அதற்கு அந்த தாய் , "அம்மா ! நானாவது பரவாயில்ல ரெண்டு
வேலைதான் பட்டினி , ஆனா என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி
தன்னோட இளம் குழந்தைகளுடன் இரண்டு நாளா பட்டினி கிடக்குறாங்க . எனவே இதனை சீக்கிரம் கொண்டு சென்று அவர்களுக்கு கொடுப்பதற்காகத் தான் ஓட
முயன்றேன் ." என்றார் .
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்னை தெரேசா , மிகவும் நெகிழ்ந்து ..." அம்மா !
கருணையிலும் சேவையிலும் என்னையே மிஞ்சி விட்டீர்களே ! " என்று கண்ணீர்
மல்க பாராட்டினார் .
பசியிலும் தானம் செய்வது என்பது ..... சொல்ல வார்த்தைகள் இல்லை ..............