எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!! ----------------------------------------------- இதுவரை வானிலிருக்கும் மின்னும் நட்சத்திரங்களை...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!
-----------------------------------------------
இதுவரை வானிலிருக்கும்
மின்னும் நட்சத்திரங்களை
நிலவுப்பெண்ணின்
அனுமதியுடன்
நான்
கொஞ்சம் கொஞ்சமாய்
கெஞ்சி கொஞ்சி பெற்று
சேகரித்துவைத்திருந்தேன்.

சேகரித்தவை யாவும்
செலவு செய்யும்
நாள் வந்துவிட்டது.

விண்மீன்கள்
மொத்தம் எத்தனை ?
எத்தனை வைத்து
எவ்வளவு எடுத்து...
அன்பான தங்கைக்கு
அருமையான வாழ்த்துக்கவி
எழுதிடலாம்..?

”அன்பு தங்கைக்கு
அள்ளி கொடுத்துவிடு
உனக்கான நட்சத்திரங்கள்
என்னோடு பத்திரமாய்
இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறது ”

வெண்ணிலவு பிறப்பித்தது
ஓர் உத்தரவு.

இதோ
மின்னும் விண்மீன்கள்
என் வாழ்த்துகளை சுமந்தப்படி
அவசரமாக விரைகிறது
அருமை தங்கையின் இல்லத்திற்கு
என் சார்பில்
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே..!
---------------------------------------------------------------

மகிழினிக்கு ( நித்யா ) இன்று பிறந்தநாள்.


# அவசர அவசரமாக கொஞ்ச நேரத்தில் எழுதிய வாழ்த்து.

பிழையேதும் இருந்தால் -அது
மழலையின் குறும்பு என்று ரசித்திடு
என் தங்கையே..!

-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 12-Sep-14, 2:34 pm

மேலே