வாழ்த்து எழுதிட- பிறந்தநாள் வாழ்த்து எழுதிட விரைந்து விரைந்து...
வாழ்த்து எழுதிட- பிறந்தநாள்
வாழ்த்து எழுதிட
விரைந்து விரைந்து
ஒரு கவி வரைந்திட
முனைந்தேன்.
புரவியொன்று கேட்டது
ஏனிந்த ஓட்டம்
ஏனிந்த ஓட்டம்
எனக்கே புழுதிக்காட்டும் ஓட்டம் ?
மின்சாரம் கேட்டது
என்ன வேகம்
என்ன வேகம்
என்னைவிட உனக்கென்ன வேகம்?
இரயில் கேட்டது
என்ன அவசரம்
என்ன அவசரம்
என்னையே தடம்புரடடிடும் அவசரம்?
ஆம்
ஓட்டம் , வேகம், அவசரம்
அங்கே
எழுத்து தளத்தில்
இரு
நல் உறவுகள் ..!
வெறும் உறவுகள்
என்றாலும் பரவாயில்லையே..!
அவர்கள் கவிஞர்கள்..!
எழுத்தாளர்கள்..!
சிந்தனை உலகில்
கற்பனைவேலைக்கு
சென்றிடுவார்களே..!
ஊர் முழிக்கும் முன்னே
முந்திக்கொண்டு நானே
பிறந்தநாள் வாழ்த்து
சொல்லிட வேண்டும்.
புரவி ரோஜா கொடுத்தது
மின்சாரம் கவிதை கொடுத்தது
இரயில் கைக்கொடுத்தது.
எனக்கு அல்ல
இன்று பிறந்தநாள் கொண்டாடும்
அண்ணம் ராம் வசந்த்க்கும்...!
தங்கை கிருஷ்ணநந்தினிக்கும்....!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சொந்தங்களே....! :)
-இரா- சந்தோஷ் குமார்