எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எச்சரிக்கை : இது ஒரு பாத்ரூம் சமாச்சாரம் ....

எச்சரிக்கை : இது ஒரு பாத்ரூம் சமாச்சாரம் . சுத்தக்காரர்கள் படிக்கவேண்டாம்


அலுவலகத்தில் இரவுப்பணி பார்த்துவிட்டு பேயறைந்தது போல பஞ்சப் பரதேசியாக வந்து கொண்டிருந்தேன். வீட்டுக்காரம்மா இடைமறித்தார்கள். வீட்டுக்காரம்மா என்றால் நானிருக்கும் வீட்டின் உரிமையாளினி என்று நேர்பொருள் கொள்க. என்ன சங்கதி என்பது போல ஏறிட்டேன். " உங்க ரூம் பாத்ரூமை ஆசிட் போட்டு கொஞ்சம் கிளீன் பண்ணி வையுங்க ......பக்கத்து வீட்ல குடியிருக்கறவங்க பாத்ரூமெல்லாம் நல்லா பந்தாவா இருக்குது ...அந்த மாதிரி நீங்களும் வச்சுக்கங்க " என்று சொல்லிவிட்டு, " அப்புறம் சாப்டாச்சா " என்றும் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

வீட்டுக்காரம்மா எப்படி என் வீட்டு பாத்ரூமையும் பக்கத்து வீட்டு பாத்ரூமையும் எட்டிப்பார்த்தார்கள் என்கிற அதிர்ச்சியை விட ஒரு பாத்ரூமை எப்படி பந்தாவாக வைத்துக் கொள்வது என்கிற கேள்விதான் எனது மண்டையைப் போட்டுக் குடை குடை என்று குடைந்து கொண்டிருக்கிறது.

நாள் : 14-Sep-14, 12:06 pm

மேலே