எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கிறுக்கல். மின்னல் *************...

கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கிறுக்கல்.

மின்னல்
*************
மழை போர்த்திய
வெண் திரையில்
பூமியின் அழகை
படம் பிடித்துச் செல்கிறது
மின்னல்...


அடகு
**************
அடகு வைத்தேன்
மீட்க முடியவில்லை
அவளிடம் என் மனசு


மயிலிறகு
****************
புத்தகத்தினுள்
முனகல்
பிரசவ வேதனையில்
மயிலிறகு!

( தளத்திலும் ஒரு வருட முன்பே பதிவு செய்திருந்தேன்)


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 14-Sep-14, 3:01 pm

மேலே