மோனை ஒரு சீரின் முதலெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன்...
மோனை
ஒரு சீரின் முதலெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன் ஒன்றி வருது மோனை ஆகும்.
மோனை எழுத்துக்கள்
நேரடியாகவே ஒன்றி வரும் எழுத்துக்களைத் தவிர்த்து (அகரம்-அன்னை, குடை-குழை முதலியன போல), கீழ்க்கானும் எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று மோனை ஆகும்.
அ - ஆ - ஐ - ஔ
இ - ஈ - எ - ஏ
உ - ஊ - ஒ -ஓ
ஞ - ந
ம - வ
த - ச
வலை - மனை - மோனை
ஞாயிறு - நான் - மோனை
கலை - காளை - மோனை
எதுகை
ஒரு சீரின் இரண்டாமெழுத்து பின்வரும் சீர்களுடைய இரண்டாமெழுத்துக்களுடன் ஒன்றி வருது எதுகை ஆகும். இரண்டாம் எழுத்து பொருந்தும் அதே நேரத்தில், இரு சொற்களுடைய முதலெழுத்துக்களின் மாத்திரை அளவுகளும் பொருந்தி வர வேண்டியது அவசியம்.
படம் குடம் - எதுகை
பாடம் கூடம் - எதுகை
படம் கூடம் - எதுகை அல்ல
பாடம் குடம் - எதுகை அல்ல