எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காற்றைத் துணையாக்கு கடலை மையாக்கு - உணர்வு ஊற்றை...


காற்றைத் துணையாக்கு
கடலை மையாக்கு - உணர்வு
ஊற்றை எழுத்தாக்கு
உலகை உனதாக்கு
நேற்று இழந்தவற்றை-நூல்
நூற்று நெசவு செய்தால்
நாளை எனும் சேலை-உனக்கு
நலமாய் அமையாது
தோற்று வீழ்ந்தாலும்
உடல் துவண்டு நலிந்தாலும்-உன்னை
தேற்றும் மனவுறுதி -அதை
திடமாய் வளர்த்துவிடு.
ஏமாற்றம் களைந்து விடு
எதிர் நீச்சல் தொடங்கிவிடு -புது
தோற்றம் பொலிந்து நிற்கும்- புலர்
காலைப் பொழுதுனக்கு!

-சிவநாதன்-

பதிவு : சிவநாதன்
நாள் : 25-Sep-14, 8:39 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே