குற்றவாளி என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்ட ஒருவரை, மக்களாகிய நாம்...
குற்றவாளி என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்ட ஒருவரை, மக்களாகிய நாம் மீண்டும் மீண்டும் மறந்து ஆட்சி அரியணையில் அமரவைக்கத்தான் போகிறோம்.
ஏனென்றால் அவரை விட்டால் இவர்
இவரை விட்டால் அவர்
என்று இருவரை தவிர வேறு எவரையும் ஆட்சியில் அமரவைக்க எங்களால் முடியாது.
எவனால் எந்த இனம் அழிந்தால் என்ன?. எவன் எந்த ஊழல் செய்தால் எங்களுக்கு என்ன? 66 லட்சமாக இருந்தால் என்ன? 1 லட்ச கோடியாக இருந்தால் எங்களுக்கு என்னய்யா கவலை..?
இலவசம் என்று எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களை நாங்கள் ஏன் கண்டிக்க வேண்டும். ?
மீண்டும் மீண்டும் இதே குற்றவாளிகளை அசூர பலத்துடன் ஆட்சிக்கு வரவைப்போம்.
ஏனென்றால் எங்களின் சிந்திக்கும் ஆற்றல்கள் யாவும் இலவசங்களில் சமாதி ஆகிவிட்டது.
அடிமாடுகளுக்கு இருக்கும் ரோஷங்கள் கூட எங்களுக்கு வரவே விடமாட்டார்கள் இந்த கழகங்களின் தலைவர்கள்.
-இப்படிக்கு
தமிழக வாக்காளர்கள்.