எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரபல திரையிசை பின்னணி பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான...

பிரபல திரையிசை பின்னணி பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே.யேசுதாஸ் இன்று பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்:-

'பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே இருக்க வேண்டும். இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது.' என்று தெரிவித்திருந்தார்.

---------------------------------------"தினத்தந்தி" வெள்ளிக்கிழமை, அக்டோபர் 03, 2014

நாள் : 3-Oct-14, 7:53 am

மேலே