எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு நிறைந்த தளத்தோழமைகளுக்கு. ....ஐந்து நாட்களுக்கு முன் என்...

அன்பு நிறைந்த தளத்தோழமைகளுக்கு. ....ஐந்து நாட்களுக்கு முன் என் அம்மா இறைவனடி சேர்ந்து விட்டார்கள். ..அதனால் நான் தளத்திற்கு வரவில்லை. ... இன்று தான் நான் தளத்திற்கு வந்தேன்....எனக்கு பயங்கர அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது....அது தோழி ஒருவரிடம் இருந்து வந்திருந்தது...அவர் அதில் அவருக்கு நம் தளத் தோழர் ஒருவரால் மிகுந்த மனவேதனை அடைந்து அதனால் இத்தளத்தை விட்டு செல்லப் போவதாக குறிப்பிட்டு இருந்தார். ...உங்களால் முமுடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் .அவர் குறிப்பிட்ட அத்தோழரை அவர் அண்ணா என்று அழைப்பதாகவும் அவரிடம் தனது அலைபேசி எண்ணை கொடுத்ததாகவும், அதன் பின் அவர் போனில் தொந்தரவு செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். ...அவரது தொந்தரவு தாங்க முடியாமல் தளத்தை விட்டு செல்வதாகவும் கூறியிருந்தார். ..

இது பற்றி எனது கருத்து. ....
பெண் படைப்பாளிகளே...தங்களது கவிதை பற்றி ரசனையோடு பதில் கருத்து வந்தால் ஓகே...அதையும் மீறி ஆண்களிடம் தனிவிடுகையில் பழகுவதை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். ..தனிவிடுகையில் உங்களைப் பற்றி முழுவதும் சொல்வதற்கு நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்...நாம் ஒவ்வொருவரும் ஒருவர் முகம் ஒருவர் அறியாமல் பழகுகிறோம்...ஒவ்வொருவருக்கும் குடும்ப பிண்ணனி வாழ்க்கை முறை வித்யாசமானதே...நமக்கு இத்தளம் திறமைகளை அழகாக வெளிக்காட்ட உதவுகிறது.....எல்லாவற்றிற்கும் ஒரு எல்லைக்கோடு வைத்துக் கொள்ளுங்கள். .....பெண்களே...தளத்தில் உள்ள அனைவரிடமும் நமது அலைபேசி எண் தர அவசியம் என்ன சற்று சிசிந்தியுங்கள். ...கருத்துப் பதிவிடல் மட்டும் போதாதா...?சற்று யோசியுங்கள். ..மேலும் ஏதேனும் பிபிரச்னை என்றால் தள நிர்வாகத்தை அனுகலாமே...ஏன் தயக்கம். ... ஒருவரது வார்த்தைகள் சரியில்லை நம் மனதை சங்கடப்படுத்தினால் அவருடன் மேலும் மேலும் பேபேச அவசியம் இல்லை. ..அவர் ஆயிரம் தனிவிடுகை அனுப்பட்டும்...நீங்கள் அவனை மனிதனாக மதிக்கா்மல் எந்த ரிப்ளையும்
கொடுக்காமல் இருந்தால் அத்தோடு பிரச்சினை ஓய்ந்து விடும்...எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய தோழி தற்போது தளத்தில் இருந்து போய்விட்டார்...இதை மற்ற தோழிகள் புரிந்து கொள்ள வேண்டும்.தயவுசெய்து தங்களது அலைபேசி எண்ணை யாருக்கும்
தராதீர்கள். ...

இந்த விஷச் செயலை செய்ய விஷமி இத்தோடு உன் ஆட்டத்தை நிறுத்திக் கொள்...படைப்பாளி என்னும் போது இச் சமுதாயம் தரும் மரியாதையை இழந்து விடாதே....

என் மனதில் அலைமோதிய எண்ணங்களை குறிப்பிட்டு விட்டேன்...பெண்களே கவனம்..

பதிவு : நிஷா
நாள் : 3-Oct-14, 3:34 pm

மேலே