எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சர்வதேச பத்திரிகையாளர்கள் திரைப்பட விழா உலகம் முழுவதும் யுத்த...

சர்வதேச பத்திரிகையாளர்கள் திரைப்பட விழா

உலகம் முழுவதும் யுத்த பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், மற்றும் சமூக சேவகர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களை கொண்ட சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் பெயரில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது.

இந்த திரைப்பட விழா சென்னையில் நேற்று (அக் 8) தொடங்கியது. வருகிற 12ந் தேதி வரை நடக்கிறது. 17ந் தேதி முதல் 19ந் தேதி வரை பெங்களூரிலும், 24ந் தேதி முதல் 26ந் தேதி வரை திருவனந்தபுரத்திலும் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க உள்பட 8 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள், 10 குறும்படங்கள் திரையிடப்படுகிறது.

இதில் சிறப்பு திரைப்படங்களாக தமிழில் பத்திரிகையாளர்களை மையப்படுத்தி வெளிவந்த ஊமை விழிகள், மலையாளத்தில் வெளிவந்த ஓம் ஓபாமா, ஆக்சிடெண்ட், உலிதவரு கண்டந்தே, ஈ நாடு ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது. டேனியல் பேர்லின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான எ மைட்டி ஹார்ட் படமும் திரையிடப்படுகிறது. அமெரிக்க துணை தூதரகத்தின் ஆதரவுடன் இந்த விழா நடத்தப்படுகிறது.

நாள் : 9-Oct-14, 2:58 pm

மேலே