எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Nice Lines..., கவலை நம்மை சில நேரம் கூரு...

Nice Lines...,


கவலை நம்மை சில நேரம்
கூரு போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதி யாவும்
தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி
மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம்போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை


இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லை என்றால்
நிலவின் அழகு தெரியாதே
கனவில் நீயும் வாழாதே
கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால் மறுபடி ஒன்று
புதிதாய் உருவாகும்...

பதிவு : Mahendran sms
நாள் : 21-Dec-13, 2:31 pm

மேலே