எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் சங்கத்துல எத்தனை பேரு...... இருக்கீங்க இங்க..? சிலருக்கு,...

என் சங்கத்துல எத்தனை பேரு...... இருக்கீங்க இங்க..?

சிலருக்கு, இடது கை பழக்கம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களுடைய தந்தையின் உயிரணுவில் அல்லது தாயின் கருவில் எழுதப்பட்ட விஷயம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கத்தரிக்கோல் உள்ளிட்ட பல கருவிகளும் வலது கை பழக்கம் உடையவர்களின் வசதிக்காகவே தயாரிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான இடது கை பழக்கமுடையவர்கள் அவற்றை படு சுலபமாகவும், புத்திசாலித்தனமாகவும் கையாளுவார்கள்.

இடது கை பழக்கம் உடையவர்களின் மூளையில் நினைவுகளைத் தேக்கி வைக்கும் பகுதி, வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இவர்களுக்கு அபாரமான நினைவுத் திறன் இருக்குமாம்! ஒரு குறை என்னவென்றால், இவர்கள் சில சின்னச் சின்ன விஷயங்களை எளிதில் மறந்து விடுவார்களாம்.

இடது கை பழக்கம் உடையவர்கள் கணிதத்தில் பெரும் புலிகளாக இருப்பார்கள். ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. கஷ்டமான ஒரு கணக்கைக் கொடுத்தால், அதற்கு வெகு எளிதாகவும் குறைந்த நேரத்திலும் அதற்குத் தீர்வு கண்டுவிடுவார்கள்.

வரலாற்றில் நாம் படித்த சில பெரிய அறிஞர்களும், விஞ்ஞானிகளும் இடது கை பழக்கம் உடையவர்களே! உதாரணம்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், மேரி க்யூரி, அரிஸ்டாட்டில், ஆலன் ட்யூரிங் ஆகியோர். ஆனாலும், இப்பழக்கத்தினால் தான் அவர்கள் மாபெரும் மேதையானார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஒரே இடத்தில் ஒரே தர வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட படிப்பு முடித்தவர்களில், வலது கை பழக்கம் உடையவர்களை விட, இடது கை பழக்கம் உடையவர்கள் 15% அதிகம் சம்பாதிப்பதாகக் கூட சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இடது கை பழக்கம் உடையவர்களிடம் அதிகப் படைப்பாற்றல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களுடைய வலது பக்க மூளை அதிகமாகச் செயல்படுவதால் தான், அவர்களால் க்ரியேட்டிவ்வாக சிந்திக்க முடிகிறதாம்!

ஹிஹி.... இந்த கணக்கு மட்டும் எனக்கு சறுக்கல்....!!

பதிவு : கட்டாரி
நாள் : 29-Oct-14, 1:38 pm

மேலே