எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

~~~வாலி அய்யாவின் பிறந்தநாள் இன்று ..அவரை பற்றிய நினைவலைகள்~~~~~...

~~~வாலி அய்யாவின் பிறந்தநாள் இன்று ..அவரை பற்றிய நினைவலைகள்~~~~~

சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சௌந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்சுக்கு எழுதி அனுப்பியதுதான் மிகவும் வெற்றிபெற்ற 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' பாடல். இதைஅனு பவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

வாலி தனிமை விரும்பி அல்ல. எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக்கொடுத்தால் கவிதை வந்து விடும்!

எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்

எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை கவிஞர் வாலி. பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!

ஸ்ரீரங்கத்தில் 'பேராசை பிடித்த பெரியார்' என்னும் சமூக நாடகத்துக்கு 'இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்?' என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 29-Oct-14, 8:50 pm

மேலே