எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேரழிவு ! சுடுகாடாய் ஆகியது எங்கள் ஊர் !...

பேரழிவு ! சுடுகாடாய் ஆகியது எங்கள் ஊர் !

நேற்று காலை (Oct 29 – 2014) 7.15 மணியளவில் இடம்பெற்ற கொடூர மண் சரிவொன்றின் காரணமாக “கொஸ்லாந்தை” என்ற என் பிறந்தவூரின் குடியிருப்பு தொகுதியொன்று முற்றாக மண்ணுள் புதைந்து போய்விட்டது. இதுவரைக்கும் ஆறுபேரின் சடலங்களே மீட்கப் பட்டுள்ளன.

முன்னூறுக்கும் மேற்பட்ட மனிதவுயிர்கள், கால்நடை விலங்குகள், வீட்டு வளர்ப்பு பிராணிகள், வீடுகள் (ஏழு லயன் குடியிருப்புகள்) முற்றாக இருக்கும் இடம் தெரியாது மண்ணுக்குள் புதையுண்டு போன பேரழிவு நடந்தேறியுள்ளது.

அடிப்படை வசதிகள் சீராக இல்லாத இந்த தோட்டப் பிரதேசத்தில் மீட்பு பணிகளுக்காக இராணுவத்தினர் குவிக்கப் பட்டாலும் மிக மோசமான விதத்தில் நிலைமை இருகின்றது.

இருபது அடிகளுக்கும் கீழ் குடியிருப்பு புதையுண்டுப் போயிருக்கின்றதாய் அறிய முடிகிறது. எந்த உயிரையும் காப்பாற்ற முடியாது என்ற அவலத்தை நினைக்கையில் பதறித் துடிக்கின்றேன்.

தற்சமயமும் மண்சரிவு நடந்துக் கொண்டிருப்பதாக தான் அறிய முடிகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் நிலைமை இன்னும் மோசமாகும்.

மேலதிக செய்திகளுக்கு இலங்கையின் ஊடக செய்திகளைப் பாருங்கள்.




நாள் : 30-Oct-14, 7:16 am

மேலே