எண்ணெய் இல்லாத தலை பழுப்பேறிய உடை எரியும் பிணம்...
எண்ணெய் இல்லாத தலை
பழுப்பேறிய உடை
எரியும் பிணம் முதல்
அத்தனை அசிங்கங்களும்
அழுக்குகளும் சுமந்து
புனிதமாய் ஓடி வரும்
ஈசன் சடை முடி அமர்ந்த
கங்கையில் குளித்தும்
பிசுபிசுப்பு போகாத உடம்பு
கனவுகள் உறைந்து
கிடக்கும் கண்கள்
குழந்தை தனத்தை விழுங்கிய
வறுமை.......
பஞ்சத்துக்கும் பசிக்கும் பிறந்தது
பணத்தின் அருமை உணராது..போல
கை நிறைய வந்தாலும்
சேர்த்து வைக்க மறுக்கிறது
கண் மூடிக் கிடக்கும் கடவுளின் சன்னிதியில்
இறை தேடி நிர்வாண மனிதர்கள்
நிச்சலனமின்றி நடமாடும் பூமியில்
நாளை எனும் நினைப்பு இழந்து
எதிர்காலம் தெரியாத வாழ்க்கை..தான்
கையேந்த சொல்லித் தந்திருக்கிறதே
கருவிலேயே..........
பாவம் தொலைக்க
கடை கோடியிலிருந்து
வரும் ஒரு மனிதம் கூடவா
உனக்கு சொல்லவில்லை
பிச்சை எடுத்தல்......கேவலமென்று.......
..