எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதோ மலையகத்தை கசக்கிப் பிழியும் மற்றுமொரு பேரிடி !...

இதோ மலையகத்தை கசக்கிப் பிழியும் மற்றுமொரு பேரிடி !

டயகம பகுதியில் உள்ள தோட்டப்பகுதி லயன் வீட்டுத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 28 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

டயகம மேற்கு தோட்டத்தின் 2ம் இலக்க பிரிவில் இரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 100ற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் டயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாள் : 11-Nov-14, 4:27 pm

மேலே